இலக்கணம்

உயர்நிலை 2 

இலக்கணம்.

செய்வினை  செயப்பாட்டுவினை  

1. செய்வினை 

ஒரு வாகியம் தனக்குரிய  எழுவாய் பயனிலை செயப்படு பொருள் ஆகிய இடங்ளைக் முறையாகக் கொண்டு அமைவது. 


1. வள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது ஒரு செய்வினை வாக்கியம். 

     எழுவாய்     வள்ளுவர்

     பயனிலை  இயற்றினார்

    செயப்படு பொருள்   திருக்குறளை

2. செயப்பாட்டு வினை 

   கீழ் உள்ள விதிகள் படி அமைவது.

     திருக்குறள் வள்ளுவரால் இயற்றப்பட்டது. செயப்பாட்டு வினை 

     1. ஐ        நீக்கப்பட்டது        திருக்குறளை 

     2. ஆல்   சேர்க்கப்பட்டது   வள்ளுவரால் 
____
     3. பட்டது, படுகிறது, படும்  இயற்றப்பட்டது

         என்று முடிந்தது.
    

வினைகளை மாற்றும் போது இவற்றை நினைவில் வைக்கவும். 

இனி வாக்கிய மாற்றங்கள் 

1. ராமன் தன்னுடைய  வீட்டுப்டங்களைச் செய்து முடித்தான்.
    வீட்டுப்பாடங்கள் ராமனால் செய்து முடிக்கப்பட்டன. 

2. மரத்தில் உள்ள பழங்கள் அன்பனால் பறிக்கப்படும் 

    அன்பன் மரத்தில் இருந்த பழங்களைப் பறித்தான் 

3.  நமது நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தமிழ்மொழி மாதத்தை ஏப்ரலில்
     கொண்டாடி மகிழ்வார்கள்.

    நமது நாட்டில் உள்ள தமிழ் மக்களால் தமிழ்மொழி மாதம் ஏப்ரலில்
    

    _______________________________________________________________________     


4.  மாணவர்கள் தங்கள் பாடங்களை செய்து ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். 

     மாணவர்களால் அவர்களின் பாடங்கள் செய்யப்பட்டு 

     _____________________________________________________     

5.  இவ்வாண்டு நமது நாட்டு மக்கள் 50வது பொன் விழாவை கொண்டாடி 
     மகிழ்வார்கள்.

    _____________________________________________________  உயர்நிலை 2 

கருத்துமாறா வாக்கியம்
கருத்துமாறா வாக்உயர்நிலை 2 

கருத்துமாறா வாக்கியம்
கருத்துமாறா வாக்கியம் என்றால் என்ன?கியம் என்றால் என்ன?

இப்பயிற்சியில் 2 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் வாக்கியம் முழுதும் எழுதப்பட்டிருக்கும். 2ஆம் வாக்கியம் முடிவு பெறாமல் நிற்கும்.
மாணவர்கள் முதல் வாக்கியத்தின் கருத்தைப் படித்து புரிந்து கொண்டு, 2வது வாக்கியத்தை எழுதி முடிக்க வேண்டும்.
அவ்வாறு எழுதும் போது பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

vஇலக்கணங்கள் (இதில் காலங்கள்ஒருமை பன்மை,பால்திணைஎண்  வேற்றுமை உருபுகள் ஆகியவை அடங்கும்.)

vவாக்கிய இயைபு


vபிழையற்று எழுதுதல்

vபின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்து எழுதவும்அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்..

1. அன்னை திரேசா ஏழைக் குழந்தைகளின்  அன்பான பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார். 

ஏழைக்குழந்தைகளின் அக்பான பேச்சு 


2. சங்க இலக்கிய பாடல்கள் மக்களின் வாழ்வியல் நெறிகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நாம் மக்களின் வாழ்வியல் நெறிகளை  அறிந்து கொள்ள 3. மக்களின் கடின உழைப்பால் பல நாடுகள் முன்னேறியுள்ளன.

பல நாடுகள் முன்றேற்றம் 


4. வாய்ப்புகள் கிடைக்கும் போது அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். 

கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்


5. உயிரினங்களின் மனிதன் வேறுபட்டுக் காணப்படுவதற்கு அவனிடமிருக்கும் பகுத்தறிவே காரணமாகும். 

மனிதனிடம் இருக்கம் பகுத்தறிவு 

6. உலக மக்கள், இனம், சமயம், பொன்றவற்றோடு பேசும் மொழியாலும் வேறுபடுகின்றனர். 


இனம், சமயம் போன்றவை மட்டுமல்லாது பேசும் மொழியாலும் 

_____________________________________________________________________________     

7. நாட்டின் தூய்மையைக் கெடுப்பது நமது உரிமை என்று மக்கள் எண்ணக் கூடாது.

நாட்டின் துய்மையைக் காப்பது தமது உரிமை என்று மக்கள்      

_____________________________________________________________________________     


8. மருத்துவத்துறையில் மனிதன் கண்டுள்ள முன்னேற்றம் அவனுடைய வயதை உயர்த்தி உள்ளது.

மருத்துவத்துறையில் மனிதன் முன்னேற்றம் காணவில்லை என்றால்

_____________________________________________________________________________     


25.9.15 பயிற்சிகள்

புனர்ச்சி  


           பின்வரும்  புணர்ச்சியைச் செய்யவும். லிடைகளை மட்டும் எழுதி         
            ஒப்படைக்கவும். 


              புணர்ச்சி

1.  உடல்வலிமை  ______________________________________
2.  பாடலாசிரியர்________________________________________
3.  அவருடைய
4.  அப்பசு
5.  கண்ணெரிச்சல்
6.  மண்ணாசை
7.  படையெடுப்பு
8.  அறஞ்செயல்
9.  வரந்தந்தார்
10.          மரவேர்
11.          பற்பொடி
12.          சொற்புணர்ச்சி
13.          முட்செடி
14.          மட்சட்டி
15.          பொற்சங்கிலி
16.          உடலோம்பல்
17.          மலையுச்சி
18.          கல்லுடைத்தான்
19.          மக்கட்பெருக்கம்
20.          இவ்வாண்டு
21.          பழத்தோட்டம்
22.          பூமாலை
23.          அவ்வோசை
24.          பணியிடையே
25.          திருவடி
26.          நெற்பயிர்
27.          சொற்றொடர்
28.          வாட்போர்
29.          மட்சட்டி
30.          பொற்குவளை
31.          தீயெரிந்தது
32.          மாவிலை
33.          பூவிதழ்
34.          இலையுதிர்
35.          வரவிருந்தான்
36.          பகையுணர்ச்சி
37.          இவ்வணி
38.          இம்முறை
39.          மும்முறை
40.          மனமிரங்கு
41.          கடலலைகள்
42.          மலைமுகடு
43.          தேனாடை
44.          பல்லாண்டு
45.          மலையோரம்
46.          பணந்தந்தார்
47.          குடற்புண்
48.          உட்புறம்
49.          பெண்ணரசி
50.          படுத்துறங்கு


 முன்னுணர்வு கருத்தறிதல்     
                         
பின்வரும் பத்தியில் கோடிட்ட இடத்தைத் தக்க உதவிச் சொல்லைக் கொண்டு நிரப்பவும்.


ஒவ்வொரு ஆண்டும்  நமது நாட்டை தூசுமூட்டம் பாதிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதை 1._____________________  என்றும் கூறலாம். இந்தத் தூசுமூட்டம் ஏற்பட காரணம் என்ன? இந்தோனேசியாவில் உள்ள அடர்ந்த  காடுகள் 2._____________________ எரிவதால்தான் இந்தத் தூசுமூட்டம் நமது நாட்டையும் பாதிக்கிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
      மேலும் போர்னீயோ 3._____________________  களிமந்தான் காட்டுப் பகுதியை விவசாயிகள் பயிர்நிலங்களாக மாற்ற முற்படுகையில் அவர்கள் காடுகளை எரிக்க எண்ணுகிறார்கள். அதனால் ஏற்படும் பெரும் 4._____________________ இத்தகைய சாம்பல் கலந்த காற்று நம் நாட்டை நோக்கி வீசுவதால் தூசு மூட்டம் உண்டாகிறது. காற்று வேறு திசையில் வீசும் காலங்களில் இந்த புகை மூட்டம் இங்கு 5.__________________  இருக்கும். ஆனால் காற்றின் திசை மாறும் போது நமது நாடும் தூசு மூட்டத்தால் பாதிக்கப்படுகிறது. சிங்கப்பூரர்கள் புகையோடு  கூடிய காற்றை நுகரமுடிவதாகவும் கூறுகின்றனர்.   


கட்டுரை எழுதுதல்

நூலகங்கள் ஏன் மக்களுக்கு
அவசியம்முன்னுரை
குறள்   " தொட்டனைத்து ஊறும் மேணற் கேணி மாந்தர்க்குக்
      கற்றனைத்து ஊறும் அறிவு." என்பது தமிழ் மறை தந்த வள்ளுவரின் வாக்கு,
மணலில் உள்ள கேணியைத் தோண்டினால் அதன் ஆத்திற்கு ஏற்ப நீர் ஊரும். அதே போன்று படிப்பதற்பே நம்முடைய அறிவு வளரும்.
ஒருவனின் அறிவு சுடர்விட காரணம் நூலகமே ஆகும்.
பல நூல்களைத் தொகுத்து வைத்திருக்கும் இடம்தான் நூலகம். நாட்டிலுள்ள மக்களின் அறிவு விரிவடைய வேண்டும் என்பதால்தான் அரசாங்கம் நூலகத்தை உருவாக்கி உள்ளது. அதை மக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும். மேலும் அதனால் பெறும் நன்மைகளையும் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பத்தி 1 ( நூலக அமைப்பு )
அரசாங்கமே பொறுப்பு ஏற்று நூலகத்தை  உருவாக்க வேண்டும்.
மக்களின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் அது அக்கறை காட்டுதல்
   நூலகம் ஏன் தேவை. ஒரு மனிதன் உலகில் உள்ள எல்லா  
  நூல்களையும் வாங்கி படித்தல் இயலாது.
  ஆனால் எல்லா நூல்களும் உள்ள நூலகத்தினால் பயன்பெறலாம்.   
 
  எல்லா நூல்களையும் படிக்க பொருளாதாரம் இடம் தாரா.
ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு.
       • அ தற்காகவே நூலகம் தேவைஅதற்குச் செல்லவும் வேண்டும். இல்லையென்றால் அரசாங்க பணம் வீணாகிவிடும்.

 பத்தி 2 ( நூலகத்தில் இன்றியமையாமை )
 
q நமது அறிவுப் பசியைப் போக்கும் அருமருந்து
q ஒரு நல்ல அறிவியலாளரும் அறிஞரும் நூலத்திலிருந்தே வெளிப்படுவர்.
q அமைதியின் இருப்பிடமாக விளங்குவதால் பெரும் பயன் உண்டு.
q கண்கள் படிப்பை மட்டுமே விருப்பும்.பத்தி 3 ( நூலகத்தில் என்ன இருக்கும். )
பத்திரிக்கை உண்டு
அரிய நூல்கள் நூலகத்தில் இருக்கும்
ஒரு தலைமுறையின் படைப்பு மற்ற தலைமுறையினருக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டும் என்பதால் அவற்றைச் சேர்த்து வைத்திருக்க முடியும்.
புகழ்பெற்ற அறிஞர்களின் கருத்தமைந்த நூல்கள் நூலகத்தில்  உண்டு. 
இதழ்கள் உண்டு (மாத, வார, ஆண்டு இதழ்கள்)
கதை நூல்கள் , கதை அல்லாத நூல்கள்  
மேற்கோள் நூல்கள்.
அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கும்.
படிப்பவர்கள் மாணவர்கள், மூத்தோர், நடுத்தர வயதுடைய மக்கள்.   
நூலகங்கள் கருத்தரங்கம், ஆய்வு அரங்கம் சொற்பொழிவு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யலாம்.
மேற்படிப்பிற்கும் பட்டக்கல்வி ஆய்வுக்கும் நூலகங்கள் பெரும் பன் தரும். ஆய்வு மாணவர்கள் நூலகத்தைத் தக்க வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேர்வில் சிறப்பாகச் செய்தல்,அறிந்து கொள்ளுதல்,அறியச் செய்தல் போன்வற்றிற்கும் நூலகங்கள் பயன்படும்.  
 பத்தி 7 ( மேற்கோள் திருக்குறள்கள்) 

1.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். 
( அறிவிடையார் எல்லாம் உடையவரே; அறிவில்லாதவர் வேறு என்ன இருந்த போதிலும் ஒன்றும் இல்லாதவரே.)
2. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

   மற்றைய எல்லாம் பிற.

ஒரு காரியத்தில் வெற்றி என்பது ஒருவனின் மனத்திடத்தைப் பொறுத்தது. மற்ற சாக்குப் போக்கெல்லாம் பிறகே மதிக்கப்படும். (மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம்No comments:

Post a Comment