Monday 1 January 2018


வாய்மொழித் தேர்வு 
உயர்நிலை 2 விரைவு/ உயர்தமிழ் 


நிறம், இனம், மதம், மொழி இவற்றால் மனிதன் வேறுபட்டிருக்கலாம். ஆனால் ஒற்றுமை என்ற உணர்வு மனிதனைத் தெய்வமாக்கலாம். மற்றவர்களையும் அவர்கள் நம்மைப் போன்றவர்கள்தான் என்ற எண்ணத்தோடு அணுகி வாழ்ந்தால் நன்மைகள் பல பெறலாம். மனிதர்கள் இன இனமாய்  தனித்து வாழ்ந்து வந்த நிலை மாறி இப்போது கூட்டமாய் இணைந்து வாழும் நிலையைப் பார்க்கிறோம். பல நாடுகளில் ஒரு இனத்து மக்கள் மட்டும் வாழ்வது குறைந்து, பலவினத்து மக்கள் வாழும் வாழ்க்கையே காணப்படுகிறது. பலவின மக்கள் வாழும் நம் நாட்டில் நான்கின மக்களும் தத்தம் விழாக்களைப் ­பிறவின மக்களோடு ஒன்றாக சேர்ந்து  கொண்டாடுவதே போற்றத்தக்க ஒன்றாகும். இன நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் அனைத்துப்­பிரிவினரும் இன நல்லிணக்க நாளை அணுசரித்து வருகின்றனர். இன நல்லிணக்கம் என்பது வருங்காலத்தை வளமாகச் சமைக்கும் ஆற்றல் படைத்த இளஞ்சிங்கப்பூரர்களிடம் ஆணித்தரமாக பதிய வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக அணுசரித்து வருகின்றனர்.
நம் நாட்டில் வாழும் மக்களிடையே இந்த நல்லிணக்கம் இல்லை என்றால் நடப்பது தீமையாக முடியலாம். ஒரு இனம் மற்ற இனத்துடன் ஒன்றித்துச் செல்ல வேண்டியது அவசியம். ஆகும். பல ஆண்டுகளாக இந்த கொள்கையைக் கடைப்பிடித்து வருவதால்தான் இங்கு அமைதியும் சுபிச்சமும் நிலவி வருகிறது.  




No comments:

Post a Comment